January 29, 2020
தேவையான பொருட்கள்:
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி
சீரகம் – அரை டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 3
கடுகு – அரை டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
வத்தல் மிளகாய் 3
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
முதலில் இந்த வெள்ளரிக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். துருவிய தேங்காய், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கடுகு இவைகளை நன்றாக மைபோல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடிப்பில் வைத்து அதில் வெள்ளரிக்காயை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கூடவே கொஞ்சம் உப்பும் சேர்த்து இதை நன்றாக வேகவைக்கவேண்டும்.
நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் மசாலாவை இந்த வெள்ளரிக்காயில் போட்டு நன்றாக கிளறி விடுங்கள். இதை அப்படியே ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். 5 நிமிடங்களில் இந்த மசாலா கலவை நன்றாக வெள்ளரிக்காய் உடன் சேர்ந்து வெந்து இருக்கும்.
இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போட்டு வெடித்ததும் 3 வத்தல் மிளகாயை போட்டு கறிவேப்பிலையையும் போட்டு வெள்ளரிக்காயில் அதை தாளித்து விடுங்கள். அதன் பிறகு ஒரு 3 டேபிள்ஸ்பூன் தயிரை எடுத்து அதை இந்த வெள்ளரிக்காய் கூட்டுடன் சேர்த்து விடுங்கள். இதை நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சுவையான அதிக சத்துக்கள் நிறைந்த மணமன வெள்ளரிக்காய் கூட்டு தயார்.