July 16, 2018 tamil.webdunia.com
தேவையான பொருட்கள்:
கனவாய் மீன் – கால் கிலோ.
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு.
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு.
பச்சை மிளகாய் – 6.
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.
எலுமிச்சைப்பழம் – 1.
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்.
செய்முறை:
மீனை சுத்தம் செய்து,வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.இதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,இஞ்சி-பூண்டு விழுது,உப்பு,எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து,தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால்,ரப்பர் போலாகிவிடும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை,சின்னவெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு,சிறிது உப்பு,எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும்.பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.