• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை

June 17, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

ரொட்டி (Bread) – 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கேரட் – ½ கப் (நறுக்கப்பட்டது)
உருளைகிழங்கு – ½ கப் (வேகவைக்கப்பட்டது, பிசையப்பட்டது)
வெங்காயம் – 1 கப் (நன்றாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 டீ ஸ்பூன் (நறுக்கியது)
புதினா இலைகள் – கை அளவு (நறுக்கியது)
கொத்துமல்லி தழை – கை அளவு (நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
சீரகத் தூள் – ½ டீ ஸ்பூன்
அரிசி மாவு – 2 டீ ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய (கலப்பதற்கு ஏதுவான) பௌலை எடுத்துகொள்ளுங்கள். ரொட்டியை துண்டு துண்டுகளாக எடுத்துகொண்டு, அதனை பௌலில் போட்டுகொள்ளுங்கள்.அத்துடன் நறுக்கப்பட்ட கேரட், பிசையப்பட்ட உருளைகிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துகொள்ளுங்கள்.

உங்கள் கைகளை கொண்டு நன்றாக பௌலில் இருப்பனவற்றை பிசைந்து (கலந்து) கொள்ளுங்கள்.
இப்பொழுது, மசாலாவை சேர்த்து கொள்ளுங்கள். ஆம், கரம் மசாலா தூள் மற்றும் சீரக தூளை சேர்த்து கொள்ளுங்கள்.உப்பு, ருசிக்கேற்ப மற்றும் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்.

இந்த பௌலில் இருப்பதனை, ஓரிரு நிமிடங்களுக்கு நன்றாக கிண்டிகொள்ளுங்கள். அதேபோல், ரொட்டி கலவையில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கவேண்டியது அவசியமாகும். அதனால், பிசைய வேண்டியதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவேளை, உங்களுடைய காய்கறி, போதுமான ஈரப்பதத்துடன் காணப்படுமெனில், தண்ணீரை அதிகம் சேர்த்துவிடாமல் கவனமாக நாம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்…தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் பின்னர், அந்த கலவையை நன்றாக பிசைந்து தேவைக்கேற்ப நீரினை சேர்த்து கொள்ளுங்கள்.

அதன்பின்னர், அதே பௌலில் அரிசி மாவை சேர்த்துகொள்ள வேண்டும். மிருதுவான நிலையை, பௌலில் இருக்கும் கலவை அடையும் வரை, நன்றாக பிசைய வேண்டியது அவசியமாகும்.

அந்த மாவை…8 லிருந்து 9 பிரிவுகளாக பிரித்துகொள்ள வேண்டும். அதனை பந்து போன்ற வடிவத்தில் உருட்டி, உங்களுடைய பசைமிக்க (பிசுபிசுவென்னும்) கைகளால் அதனை வடை போன்று தட்டையாக தட்ட வேண்டும்.

வடைகள் அனைத்தும் தட்டை வடிவத்தில் இருக்க வேண்டியதில் கவனம் கொள்ள வேண்டும். இல்லையென்றால்…அது சரியாக உள்ளே, வேகுவதற்கான வாய்ப்பு குறைந்து போகிறது.

ஒரு ஆழமான வறுப்பதற்கு ஏதுவான கடாயை எடுத்துகொள்ளுங்கள். அதில் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்.

எண்ணெய்யானது சூடாக இருக்குமெனில், அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வடையாக கடாயில் போட வேண்டும். அதேபோல், வறுக்கும் கடாயில் போடப்படும் வடையினை கொண்டு ஒருபோதும் கடாயை நிரப்பிவிட கூடாது. இடைவேளி (Space) என்பது வேண்டும். அப்பொழுதுதான் காய்கறி வடையின் தன்மையானது நமக்கு மொறுமொறுவென கிடைக்கும். ஆம், ஒரு நேரத்தில் 2 அல்லது 3 வடையை மட்டும் கடாயில் பொறிக்க வேண்டியது அவசியமாகும். கடாயின் அளவை பொறுத்தே நாம் வடையை அதில் போட வேண்டும்.

அந்த வடையை சில நிமிடங்கள் பொறித்து, திருப்பி போட (TURN OVER) வேண்டும். அப்பொழுது தான் வடையானது முழுவதுமாக பொறியும்.

அதேபோல், வடையை திருப்பி போட்ட பின்னர், கருகாமல் பார்த்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அதாவது, அந்த வடையின் நிறமானது தங்க பழுப்பு நிறத்தை அடையும் வரை பொறிக்க வேண்டும்.
அவ்வாறு தங்க பழுப்பு நிறத்தை அடையும்பொழுது, கிட்சன் துணியை கொண்டு…இருக்கும் மீதி எண்ணெய்யை வடிகட்டி, வடையை மட்டும் எடுக்க வேண்டும்.

அந்த வடை, இப்பொழுது மிகவும் மொறுமொறுவென டேஸ்டியாக இருக்கும்.
இந்த மொறுமொறுவென இருக்கும் காய்கறிகள் கலந்த வடையை பரிமாறி, சுடசுட தட்டில் வைத்து… பூண்டு தக்காளி சட்னி, பச்சை புதினா அல்லது மிளகாய் சட்னியுடனோ அல்லது தக்காளி கெட்ச்அப்புடனோ சேர்த்து சாப்பிட, ‘இன்னும் வேண்டும்’ என்னும் ஆர்வத்தை அது உங்கள் மனதில் தூண்டுகிறது.

மேலும் படிக்க