September 22, 2018
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – ஒரு கப்.
துவரம் பருப்பு – கால் கப்.
சிறிக்கீரை – கால் கப் (பொடியாக நறுக்கியது).
சீரகம் – ஒரு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – எட்டு.
உப்பு – தேவைகேற்ப.
செய்முறை
இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து அதனுடன் கீரை, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கவிடவும்.பனிரெண்டு மணிநேரம் கழித்து நன்றாக கலக்கி இட்லி பாத்திரத்தில் ஊற்றி சுட்டு எடுக்கவும்.சுவையான சத்து மிகுந்த பச்சை இட்லி ரெடி.