August 24, 2017
manakkumsamayal.com
தேவையான பொருட்கள்:
மீன் – கால் கிலோ
தேங்காய்த்துருவல் – அரை மூடி
புளி – சிறிதளவு
வெங்காயம் – 1
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
சாம்பார் மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்சியில் தேங்காய்த்துருவல், வெங்காயம், பெருஞ்சீரகம் இவை மூன்றையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையைப் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள் போட்டு பிசறி வைத்துக் கொள்ளவும்.
பின்பு சிறிதளவு புளியை கரைத்து அதில் ஊற்றி கொள்ளவும். அதன் பிறகு அதில் உப்பு போட்டு மீனையும் போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டு, எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி இரண்டு அல்லது மூன்று துண்டு மீனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் ரெடி.