• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா இறால் ரோஸ்ட்

February 22, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

பெரிய இறால் – 750 கிராம்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ரோஸ்ட் செய்வதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

வெங்காயம் – 1 1/2 கப் (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

வெந்தய பொடி – 1 சிட்டிகை

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசி நீரை முற்றிலும் வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து பிரட்டி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு 5 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுத்து, இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து, அதில் கடுகு போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி, பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் மிளகுத் தூள், வெந்தய பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி, மசாலா அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும். இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 1/4 கப் சூடான தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, வாணலியை மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் ரெடி!!!

மேலும் படிக்க