December 13, 2018 tamil.webdunia.com
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 6 பல்லு
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
புளி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும். அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.