• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை

July 1, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

உலர்ந்த க்ரான்பெரி – 1 கப்
பிஸ்தா – 1½ கப்
சுத்திகரிக்கப்பட்ட மாவு – 2 ½ கப்
உருகிய வெண்ணெய் – 1 கப்
ஐசிங் சக்கரை – 1½ கப்
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – ¼th தேக்கரண்டி
வெண்ணிலா – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செயல்முறை:

ஒரு மிக்ஸியில் க்ரான்பெரி மற்றும் பிஸ்தாவை போட்டு அதை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது, மிக்ஸியில் உருகிய வெண்ணெய், முட்டை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும், ஐசிங் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.

மேலே குறிப்பிடப்பட்ட கலவையை மிக்ஸியில் நன்கு கலக்கினால் உங்களுக்கு ஒட்டும் பதத்தில் மாவு கிடைக்கும்.

மிக்ஸியில் இருந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடுங்கள். இப்பொழுது மாவு ஒட்டும் பதத்தில் இருக்கும்.

ஒட்டும் பதத்தில் உள்ள மாவுடன் உதிரி மாவை கலந்து உங்கள் கைகளால் மாவை நன்கு திரட்டி உருட்ட வேண்டும்.

இப்போது, சமையல் செய்யும் பாத்திரத்தின் மேல் சிறிது உதிரி மாவை தூவி, நீங்கள் திரட்டி வைத்துள்ள மாவை ஒரு உருளை வடிவத்தில் வைத்து விடுங்கள். மிகவும் கவனமாக மாவின் மேல் பரப்பை தட்டி மட்டப்படுத்துங்கள்.

இப்பொழுது ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் உருளை வடிவ மாவை வைத்து விடுங்கள்.

உங்களுடைய மைக்ரோவேவ் ஓவனை 160 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சூடாக்கி கேக்கை சுமார் 20-22 நிமிடங்கள் வரை பேக் செய்யுங்கள்.

பேக்கிங் முடிந்த பின்னர் அதை வெளியே எடுத்து சுமார் 10 நிமிடங்கள் வரை குளிர விடுங்கள்.

இப்பொழுது அதை துண்டுகளாக வெட்டி விடுங்கள். வெட்டி முடித்த பின்னர் உங்களுடைய பிஸ்கோத் உட்புறம் வேகாமல் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

எனவே வெட்டிய துண்டுகளை பேக்கிங் தட்டில் மீண்டும் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை பேக் செய்ய வேண்டும்.

பேக்கிங் முடிந்த பின்னர் உங்களின் பிஸ்கோத்தை வெளியே எடுங்கள். இப்பொழுது உங்களின் மிருதுவான மற்றும் முறுமுறுப்பான க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கோத் தயார்.

நீங்கள் உங்களின் விருந்தினர்களுக்கு இந்த பிஸ்கோத்தை காபியுடன் இணைந்து பறிமாறி அவர்களை ஆச்சர்யப்படுத்துங்கள்.

மேலும் படிக்க