April 1, 2019 tamil.webdunia.com
தேவையான பொருட்கள்:
சதைப்பற்றுள்ள மீன் – 5 துண்டுகள்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 8
பட்டை – ஒரு சிறிய துண்டு
அன்னாசிப் பூ – 1
ஏலக்காய் – 2
மிளகுத் தூள் – ஒரு மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் – தேவையான அளவு
பிரியாணி இலை – 1
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறி வாசம் வரும்வரை வதக்கவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு துணியில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப் பூ ஆகியவர்றை சேர்க்கவும். நீர் கொதிக்க தொடங்கும்போது, மீனை சேர்க்கவும். அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். கடைசியாக வெக்காயத்தாள் மற்றும் சூப் இலையை (பிரியாணி இலை) சேர்க்கவும். சுவையான மீன் சூப் தயார். இதனை சாதத்துடனும் சாப்பிடலாம்.