June 20, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
உருகிய உப்பு சேர்க்காத வெண்ணெய் – 55 கிராம்
தூளாக்கிய சர்க்கரை – 25 கிராம்
நொறுக்கப்பட்ட பிஸ்கட் – 15 4.
உப்பு – ஒரு சிட்டிகை
கன்டென்ஸ்ட் மில்க் – 125 மில்லி
தேங்காய் – 40 கிராம்
சாக்லேட் சிப்ஸ் – 125 கிராம்
மிக்ஸ்டு நட்ஸ் – 50 கிராம் (நறுக்கியது)
செயல்முறை:
பர்பி செயல்முறை தொடங்குவதற்கு முன், ஒரு கிண்ணத்தில் முற்றிலும் நொறுக்கப்பட்ட பிஸ்கட், தூளாக்கிய சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விடுங்கள்.
நீங்கள் பொருட்களை கலக்கும் போது ஓவனை 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சூடாக்க மறக்க வேண்டாம்.இப்போது, ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் உருகிய வெண்ணெயை சேர்க்க வேண்டும்.
தற்பொழுது நொறுங்கிய பிஸ்கட் கலவையை உருகிய வெண்ணெய் உடன் சேர்த்து அந்த கலவையை நன்கு கலக்கவும்.ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் அந்த கலவையை ஊற்றவும். நீங்கள் பேக்கிங் தட்டில் கலவையை ஊற்றும் முன் அந்த தட்டில் நெய் தடவக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு அகன்ற தட்டையான அலகு கொண்ட கரண்டி கொண்டு கலவையை நன்றாக சமப்படுத்துங்கள். தேங்காய் துருவளை எடுத்து பிஸ்கட் கலவை மீது தூவி ஒரு தேங்காய் அடுக்கை உருவாக்குங்கள். இப்போது பேக்கிங் தட்டில் ஊற்றப்பட்ட கலவையை நன்கு சமப்படுத்தி அதன் மீது சாக்லேட் சிப்ஸை பரப்பவும்.
அப்பொழுது, கன்டென்ஸ்ட் பாலை ஊற்றி பாலால் ஆன ஒரு அடுக்கை உருவாக்குங்கள். இறுதியாக பால் அடுக்கின் மீது மிக்ஸ்ட் நட்களை பரப்பவும்.இந்த கலவையை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கலவை குளிர்ந்த பின்னர் அதை பர்பி வடிவில் வெட்டி எடுங்கள்.