தேவையான பொருட்கள்
சிக்கன் -அரை கிலோ
பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
இஞ்சி துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பூண்டு துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
உருளைக் கிழங்கு -1 (பெரியது) – (வேகவைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்)
கருவேப்பில்லை ,புதினா தழை -தேவையான அளவு
கரம் மசாலா அல்லது மீட் மசாலா -1 டீஸ்பூன்
முட்டை -1 (நன்கு அடித்து வைத்துகொள்ளவும்)
பிரட் தூள் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர் மூலம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் ,இஞ்சி,பூண்டு மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன்,கரம் மசாலா தூள்,உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறது நேரம் சுடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணையை விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்