April 20, 2017 koodal.com
தேவையான பொருட்கள்:
மக்ரோனி – 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சைமிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) – 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டீ ஸ்பூன்
செய்முறை:
மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்.வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.
பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும்.எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.