July 19, 2018 tamil.webdunia.com
தேவையான பொருட்கள்:
காளான் – அரை கப்
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
சின்ன வெங்காயம் – கால் கப்
தக்காளி – இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
கறிவேப்பில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
சோம்பு தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.தக்காளி,இஞ்சி,பூண்டு விழுது,பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியா தூள்,உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.
பிறகு மிளகு தூள்,சீரக தூள்,சோம்பு தூள்,கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காளான் சேர்த்து வதக்கி,காளான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.சுவையான காளான் மசால தயார்.