January 24, 2019 tamil.webdunia.com
தேவையான பொருட்கள்:
சேப்பங்கிழங்கு – 4
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – ½ கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
தனியாத் தூள் – ¼ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி – தேவைக்கேற்ப
செய்முறை:
சேப்பங்கிழங்குகளை சுத்தமாக கழுவி பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து வேகவைக்கவும். பின்னர் சேப்பங்கிழங்குகளை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் உப்பு மிளகாய் தூள், தனியாத் தூள் மற்றும் பெருங்காயத் தூள் கலக்கவும். அதனுடன் நறுக்கிய சேப்பங்கிழங்கு சேர்த்து கிளறவும். 15 நிமிடங்களுக்கு அதனை ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் மசாலா சேர்த்த சேப்பங்கிழங்கு களை கலந்து மிதமான சூட்டில் 5 முதல் 8 நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மென்மையாக கிளறவும்.
அடிப்பிடிக்காமல் பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.