February 26, 2019 tamil.samayam.com
சுவையான ஸ்பைசி மட்டன் கறி ரெசிபியை மிகவும் எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!
தேவையானவை: மட்டன் (எலும்பில்லாதது) – அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (சேர்த்து) – ஒரு கப், மட்டன் மசாலா – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை – தாளிக்க தேவையான அளவு, முந்திரிப் பருப்பு – 10, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மட்டன் மசாலா, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு மட்டனை ஆற வைக்கவும். ஆறியதும் நீள நீள துண்டுகளாக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து, பின்னர் முந்திரிப் பருப்பை சேர்க்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து மட்டனை போட்டு… கூடவே மட்டன் வேக வைத்த தண்ணீரை சிறிதளவு சேர்க்கவும்.
அடுப்பை சிறிய தீயில் வைத்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.