September 19, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 3 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
மசாலா பொருட்கள்…
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
சோம்பு – 1 டீஸ்பூன்
செட்டிநாடு மசாலா பொடிக்கு…
வரமிளகாய் – 6-8
மல்லி – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை – 5 செ.மீ
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 1
தேங்காய் மசாலாவிற்கு…
தேங்காய் – 1 கப்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ‘செட்டிநாடு மசாலா பொடிக்கு’ கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் 15-20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, பின் இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 15-20 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!