March 30, 2017
samayalkurippu.com
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்
பிரெட் துண்டு – 4
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி துருவல் – சிறிதளவு
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
வதக்கிய கலவையுடன் பிரெட் துண்டு, வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பின்பு, நான் ஸ்டிக் தவாவில் உருண்டைகளை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.