August 30, 2017 manakkumsamayal.com
தேவையான பொருட்கள்:
வெங்காயம் -2
தக்காளி -5
இஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கடுகு,உளுந்தம் பருப்பு-1 டீஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
வெந்தயம் -அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய்-1
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
வேக வைத்த பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது கையால் மசித்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதில் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வைதக்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான தக்காளி சாம்பார் ரெடி.