• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேங்காய் பால் முட்டை குழம்பு

March 3, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 2

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப் (ஓரளவு கெட்டியாக)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…

பட்டை – 1/2 இன்ச்

கிராம்பு – 1

வறுத்து அரைப்பதற்கு…

மிளகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பூண்டு – 4-5

செய்முறை:

முதலில் முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.பின் அதில் தேங்காய் பால், 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, குழம்பானது ஓரளவு கெட்டியாக இருக்கும் போது, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி, குழம்பில் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தேங்காய் பால் முட்டை குழம்பு ரெடி!!!

மேலும் படிக்க