• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய…!!

June 18, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
நாட்டுக்கோழி – 1/2 kg
பச்சை மிளகாய் – 1
தேங்காய் – 1 துண்டு
பட்டை, கிராம்பு – தலா 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு பற்கள் – 6
சின்ன வெங்காயம் – 8
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

நாட்டுக்கோழி துண்டுகளை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தப்படுத்தி வைத்து கொள்ளவும். மேலே கூறப்பட்டுள்ள மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கிராம்பு, பட்டை, தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸ்யில் இட்டு நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த அரைத்த விழுதை அதில் இட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கழுவிய நாட்டுக்கோழி துண்டுகளை அந்த மசாலாவில் போட்டு நன்றாக பிரட்டி தேவையான அளவு கல் உப்பு அல்லது சாதாரண உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்-இல் வைத்து ஒரு அரை மணி நேரம் வேக விடவும்.

தண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளலாம். நாட்டுக்கோழி நன்றாக வெந்ததும் அதை தண்ணீர் இல்லாமல் நன்றாக வறுவல் பதத்திற்கு பிரட்டி கறிவேப்பில்லை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். சுவையான நாட்டுக்கோழி மிளகு வறுவல் தயார்.

மேலும் படிக்க