March 18, 2017 tamil.boldsky.com
நீங்கள் ஒரு ஆரோக்கியமான காலை அல்லது மாலை சிற்றுண்டியை தேடுகின்றீர்கள் எனில் இட்லி உங்களுக்கான உணவு ஆகும்.
நீங்கள் தென்னிந்திய உணவுகளின் சுவைக்கு ரசிகர் என்றால், இட்லி, நிச்சயமாக உங்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும்.
நீங்கள் ஒரு ஆரோக்கியமான காலை அல்லது மாலை சிற்றுண்டியை தேடுகின்றீர்கள் எனில் இட்லி உங்களுக்கான உணவு ஆகும்.
நீங்கள் இட்லி செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ரவா இட்லி செய்முறை மிகவும் எளிதானது மற்றும் இதை மிகக் குறைந்த நேரத்தில் தயாரித்து விட முடியும்.
இதை சுமார் 10-12 நிமிடங்களில் தயாரித்து விட முடியும். காலை அல்லது மாலை நேரத்தில் நீங்கள் அவசரத்தில் இருக்கும் பொழுது, உங்களின் உறவினர்களுக்கு தேவையான உணவை தயாரிக்க இந்த ரவா இட்லி உங்களுக்கு கை கொடுக்கும். காலை அல்லது மதிய உணவிற்கு உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் இதை தயார் செய்து கொடுக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த எளிய ரவா இட்லியை எவ்வாறு செய்வது? அதற்கான செய்முறையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பறிமாறும் அளவு – 5 இட்லி தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள் சமையல் நேரம் – 10 நிமிடங்கள் தேவையான பொருட்கள்: இட்லி மாவுக்கு 1. ரவை – 1 கப் 2. தயிர் – ¼ கப் 3. கொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன் (நறுக்கியது) 5. உப்பு – தேவைக்கு ஏற்ப மற்ற பொருட்கள் 6. எண்ணெய் – 1 தேக்கரண்டி 7. நெய் – ½ தேக்கரண்டி 8. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி 9. கடுகு – ½ தேக்கரண்டி 10. முந்திரி – 1 டீஸ்பூன் (உடைத்தது) 11. சீரகம் – ½ தேக்கரண்டி 12. கறிவேப்பிலை – 4 13. பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி (நறுக்கியது) 14. பெருங்காயம் – ஒரு சிட்டிகை செயல்முறை: 1. ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் ரவா, தயிர், மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது, மிகவும் மெதுவாக இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இந்தக் கலவை இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை இந்த நடைமுறையைப் பின்பற்றவும்.
2. இப்போது, தாளிதம் செய்யும் நேரம். ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து வெப்ப மூட்டவும். அதன் பின்னர் அதில் சிறிது எண்ணெய், மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகு, உளுந்து, கறி வேப்பிலை, முந்திரி, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். இவை அனைத்தும் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
3. தாளித்த பொருட்கள் அனைத்தும் தயாரான உடன், இதை மாவு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் அதில் சிறிது தண்ணீர் தெளித்து கலக்கவும். இப்பொழுது மாவு கலவை நன்கு பொங்கி வர ஆரம்பிக்கும். அதன் பின்னர் மாவு கலவையை நன்கு கலக்கவும். 4. இப்போது, உங்களுடைய இட்லிதட்டை எடுத்து அதில் எண்ணெய் தடவி அதில் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
5. பொதுவாக ரவா இட்லி வேக சுமார் 7-8 நிமிடங்கள் பிடிக்கும். இட்லி வெந்த பின்னர் அதை ஒரு கரண்டியால், நெம்பி இட்லியை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். 6. இப்பொழுது உங்களுடைய சூடான ரவா இட்லி பறிமாற தயாராக உள்ளது. நீங்கள் இந்த இட்லியை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி உடன் பரிமாற முடியும்.
இந்த அற்புதமான ரவா இட்லி செய்முறையை வீட்டில் முயற்சி செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.