February 13, 2017 awesomecuisine.com
தேவையான பொருட்கள்
முந்திரி – கால் கப்.
நெய் – மூன்று தேகரண்டி.
சோம்பு – அரை டீஸ்பூன்.
பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது).
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்.
பட்டை – ஒன்று.
லவங்கம் – ஒன்று.
கஸ்துரி மேத்தி பவுடர் – கால் டீஸ்பூன்.
உப்பு – தேவைகேற்ப.
அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை.
தக்காளி – ஒன்று (நறுக்கியது).
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது).
கரம் மசாலா – கால் டீஸ்பூன்.
சாதம் – இரண்டு கப்.
செய்முறை
கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கஸ்துரி மேத்தி, உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, தக்காளி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.பின், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.வேகவைத்த சாதம் அதில் போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.