November 29, 2018 tamilboldsky.com
தேவையான பொருட்கள்:
நேந்திரம்பழம் – 3
இஞ்சி பூண்டு விழுது – 3தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 2
தக்காளிப்பழம் – 2
கடுகு+உளுந்து – அரை தேக்கரண்டி
சீரகம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அரைத்த பச்சை மிளகாய் – 3
தேக்கரண்டி முந்திரி & கருப்பு உலர் திராட்சை (அல்லது) நிலக்கடலை – தேவையான அளவு
வாசனைக்காக:
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
இலவங்க பட்டை – சிறிதளவு
உலர் ரோஜா இதழ்கள் – 5
இதழ்கள் (பட்டை, இலவங்கம், ரோஜா இதழ் மூன்றும் சேர்த்து பிரியாணி மடிப்பு என மளிகையில் கிடைக்கும்)
ஆலிவ் எண்ணெய் / சுத்தமான தேங்காய் எண்ணெய் / கடலை எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெய் – கேரளத்து சுவை விரும்பிகளுக்காக.
கடலை எண்ணெய் – சத்து மிகுந்தது; தோலுக்கு நல்லது; சுவையூட்டிக்காக பயன்படுத்தலாம். அல்லது வாசனைக்காக நெய் பயன்படுத்தலாம்.
செய்முறை:
முதலில் நேந்திரம்பழத்தை இரண்டாக அரிந்து, அதை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை விட வேண்டும்.
வானலியில் எண்ணெ/ நெய்யை ஊற்றி, வழக்கம்போல கடுகு உளுந்தை பொறித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு, சீரகம், நிலக்கடலை, பச்சை மிளகாய் சாந்து, கருவேப்பிலையை வாசனை வரும்வரை நன்கு வதக்கவும்.
அடுப்பில் அனல் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.வெங்காயத்தை மட்டும் முதலில் போட்டு வதக்கினால், பதார்த்தம் சுவையுடன் மட்டுமின்றி, நல்ல வாசனையுடனும் கிடைக்கும். (வெங்காயம் ஆண்மைக்கு நல்லது)
இலவங்கப் பட்டை-ரோஜா இதழ்-ஏலக்காயை இடித்தும் போடலாம், அல்லது பொடித்தும் போடலாம். (உடல் எடையைக் குறைக்கும் இலவங்கம்) மேற்கூறிய அனைத்தையும் செய்த பிறகு, வதக்கலை வானலியிலே வைத்துக்கொள்ளுங்கள்.