தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிது (நெய்யில் வறுத்தது)
பால் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது