September 28, 2018 koodal.com
தேவையான பொருட்கள்:
பன் – 12 (1 பாக்கெட்).
கடுகு உளுந்து – சிறிதளவு.
பட்டை – 1 அல்லது 1/2 .
கிராம்பு – 1.
ஏலக்காய் – 1.
சோம்பு – 1 சிட்டிகை.
பச்சைமிளகாய் – 3.
சின்ன வெங்காயம் – 10.
தக்காளி – 1 .
கேரட் – 1 பெரியது.
பச்சப்பட்டாணி – 1 கப்.
தேங்காய் பால் – 2 கப்.
புதினா – 5 இலைகள்.
மல்லித்தழை – சிறிதளவு.
எண்ணை – தாளிக்க தேவையான அளவு.
கறிவேப்பிலை – சிறிதளவு.
நெய் – 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி – 1 துண்டு.
பூண்டு – 2 .
சின்ன வெங்காயம் – 3.
செய்முறை
பேக்கரியில் கிடைக்கும் ஒரு பாக்கெட் சிறிய பன்னை பிச்சு மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணைய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுந்து, பட்டை கிராம்பு, சோம்பு, ஏலம் போட்டு வெடிக்கும் போது பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வதங்கிய வெங்காயத்துடன் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின் தக்காளி, புதினா, மல்லித்தழை சேர்த்து தக்காளித் தோல் சுருளும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வதங்கிய மசாலாவுடன் வேகவைத்த கேரட், பட்டாணி சேர்த்து, உதிர்த்து வைத்திருக்கும் பன் தூளை சேர்த்து நன்கு கிளறி விடவும். கட்டியாகாத அளவுக்கு வதக்கிய பின் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். பன் வெந்து கிச்சடிப் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய் சேர்த்து மல்லித்தழை தூவி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சூடான சுவையான பிரட் கிச்சடி தயார். கொதிக்க கொதிக்க சாப்பிடாமல் லேசாக ஆறிய பின் சாப்பிட்டால் அதன் சுவை அலாதியாய் தெரியும்.
குறிப்பு:
விரும்பியவர்கள் அரை எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு விட்டு சாப்பிட்டால் சுவையும் மணமும் பிரமாதமாயிருக்கும்.
சாதாரண கடைகளில் கிடைக்கும் பன்னிலும் செய்யலாம். ஆனால், செய்யும் முன்பு மேலேயுள்ள பிரவுன் கலர் லேயரை அப்புறப்படுத்திவிட்டு பின்பு கிச்சடிக்கு உபயோகப்படுத்தவும்.
வீட்டில் காய்ந்து மீந்த பன், பிரட் போன்றவற்றிலும் செய்யலாம்.தேங்காய் பாலுக்கு பதில் தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.