September 6, 2017
tamilboldsky.com
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1/2 கப்
பச்சை பாசி பருப்பு உடைத்தது – 1/2 கப்
பெருங்காயம் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
நெய்-1டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 5 கப் (ஊற வைக்க)
செய்முறை:
பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.
மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்.கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்.இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.