தேவையான பொருட்கள்:
பிரட் – 3 துண்டுகள்
முட்டை – 1
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் – சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், பிரட் முட்டை உப்புமா ரெடி!!!
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்