September 16, 2017
tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் (பீர்க்கங்காய்) – 1/2
கடலை மாவு – 1/2 பெளல்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
பீர்க்கங்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது ஒரு துண்டுப் பகுதியை மட்டும் எடுத்து தோலை உரிக்கவும்.தோலுரித்த பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெளலில் கடலை மாவை எடுத்து கொள்ளவும்.அதனுடன் மஞ்சள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.அதனுடன் மேலும் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து கலவையை நன்றாக கலக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். 1-2 நிமிடங்கள் வரை எண்ணெய் நன்றாக சுடும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு எண்ணெய்யை கடலை மாவு கலவையில் ஊற்ற வேண்டும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கடலை மாவு பேட்டரை சரியான பதத்தில் தயாரிக்க வேண்டும்.இப்பொழுது பொரிப்பதற்கு எண்ணெய்யை கடாயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். நறுக்கிய பீர்க்கங்காயை இந்த பேட்டரில் நன்றாக முக்கி எடுக்க வேண்டும்.
ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.பஜ்ஜி பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.இப்பொழுது பஜ்ஜியை எண்ணெய்யிலிருந்து எடுத்து நன்றாக எண்ணெய்யை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.சூடான மொறு மொறுப்பான காரசாரமான பஜ்ஜி ரெடி