July 22, 2017 awesomecuisine.com
By Praveen Kumar
ப்ரோக்கோலி பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு, ஆரோக்கியமான சத்தான மற்றும் சுவையான ரொட்டி.
தேவையான பொருட்கள்
ப்ரோகோலி – கால் கப்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கோதுமை மாவு – ஒன்றை கப்
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ப்ரோகோலி சேர்த்து பமூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
ஆறியதும் தண்ணீர் வடிகட்டிய ப்ரோகோலி, இஞ்சி, இரண்டு டீஸ்பூன் ப்ரோகோலி வேகவைத்த தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு, ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு வடிகட்டிய தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
பிறகு, சப்பாத்தி திரட்டி, முக்கோன வடிவில் மடித்து மறுபடியும் திரட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.