May 20, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா – 1/2 கிலோ
தேங்காய் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
முட்டை – 2 உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 கப்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை கழுவி நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பவுடர், மல்லி தூள், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, பின் உப்பு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடம் ஆன பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி மீண்டும், பிரட்டி, கொத்தமல்லியை தூவி கைகளால் நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள கீமாவை கட்லெட்டுகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் கீமா கட்லெட் ரெடி!!!