• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மட்டன் கைமா குழம்பு

April 29, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

மட்டன் கைமா – 250 கிராம்.
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது).
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது).
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
பச்சை மிளகாய் – 2.
சீரகம் – 1 டீஸ்பூன்.
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்.
மிளகுத் தூள் – 1 சிட்டிகை.
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்.
கரம் மசாலா – 1 சிட்டிகை.
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிது.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் மட்டன் கைமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளி, ஊற வைத்த கைமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியை திறந்து பார்த்து, குழம்பு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பு

மேலும் படிக்க