• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மட்டன் தோரன்

October 19, 2018 தண்டோரா குழு

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

தேங்காய் – 2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டேபிள்
ஸ்பூன் பட்டை – 3 இன்ச்
ஏலக்காய் – 4
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 5 பற்கள்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரை திறந்து, அதிடல் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு மட்டனுடன் ஒன்று சேர பிரட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து 8-10 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், மட்டன் தோரன் ரெடி!!!

மேலும் படிக்க