April 7, 2018 tamil.samayam.com
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – அரை கிலோ,
வெங்காயம் – 4,
பச்சைமிளகாய் – 4,
கொத்தமல்லித் தழை – சிறிது,
புதினா இலை – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
இஞ்சி – ஒரு தேக்கரண்டி,
பூண்டு – ஒரு தேக்கரண்டி,
தக்காளி – 4,
மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி,
வத்தல் தூள் – 3 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் (தேவையென்றால்) சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.அதன் பிறகு தக்காளி, பச்சைமிளகாய், மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
வதக்கிய மசாலாவுடன் கோழிகறியை சேர்த்து வத்தல் தூள் மற்றும் உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.கறியில் மசாலா கலவை சேர்ந்து தண்ணீர் இல்லாமல் வற்றும் வரை வதக்கி பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.