• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரவா அப்பம்

June 3, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப்

கோதுமை மாவு 1/4 கப்

மைதா – 1/4 கப்

சர்க்கரை – 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

சோடா உப்பு – 1 சிட்டிகை

உப்பு – 1 சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ரவையைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு மணிநேரம் ஆன பின்னர் அதில் கோதுமை மாவு, மைதா மற்றும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி ஓரளவு கெட்டியான மாவு போல், கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடடா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், ரவா அப்பம் ரெடி!!!

மேலும் படிக்க