September 21, 2017
manakkumsamayal.com
தேவையான பொருட்கள்:
ராகி மாவு -1 கப்
வெங்காயம் -1
கடலை பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பில்லை-சிறிது
பச்சை மிளகாய் -1
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பில்லை,கடலை பருப்பு ,உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பிசைந்து வைத்ததை எண்ணெயில் சிறிய துண்டுகளாக போட்டு எடுக்கவும் .ராகி பக்கோடா ரெடி.