October 5, 2017
tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
ரொட்டி (Bread) – 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கேரட் – ½ கப் (நறுக்கப்பட்டது)
உருளைகிழங்கு – ½ கப் (வேகவைக்கப்பட்டது, பிசையப்பட்டது)
வெங்காயம் – 1 கப் (நன்றாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 டீ ஸ்பூன் (நறுக்கியது)
புதினா இலைகள் – கை அளவு (நறுக்கியது)
கொத்துமல்லி தழை – கை அளவு (நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
சீரகத் தூள் – ½ டீ ஸ்பூன்
அரிசி மாவு – 2 டீ ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய (கலப்பதற்கு ஏதுவான) பௌலை எடுத்துகொள்ளுங்கள். ரொட்டியை துண்டு துண்டுகளாக எடுத்துகொண்டு, அதனை பௌலில் போட்டுகொள்ளுங்கள்.அத்துடன் நறுக்கப்பட்ட கேரட், பிசையப்பட்ட உருளைகிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துகொள்ளுங்கள்.
உங்கள் கைகளை கொண்டு நன்றாக பௌலில் இருப்பனவற்றை பிசைந்து (கலந்து) கொள்ளுங்கள்.இப்பொழுது, மசாலாவை சேர்த்து கொள்ளுங்கள். ஆம், கரம் மசாலா தூள் மற்றும் சீரக தூளை சேர்த்து கொள்ளுங்கள்.உப்பு, ருசிக்கேற்ப மற்றும் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்.