August 16, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
வரகரிசி மாவு (ரெடிமேட்) – இரண்டு கப் (சலித்து, இரண்டு நிமிடம் வறுத்தது))
உளுந்து மாவு _அரை கப் (உளுந்தை இரண்டு நிமிடம் வறுத்து மாவாக அரைத்து கொள்ளவும்
உப்பு – தேவைகேற்ப
வெண்ணெய் – அரை மேஜைக் கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் வரகு அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு, வெண்ணெய் சேர்த்து கையால் கிளறவும்.பின், தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.பின், எண்ணையில் போடும் போது வெடிக்காமல் இருக்க அதில் உசியால் ஒரு ஓட்டை போட்டு கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.