June 2, 2018
awesomecuisine.com
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி – ஒரு கப்
தண்ணீர் – மூன்றை கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
தயிர் – தேவையான அளவு
கறிவேப்பில்லை – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.பிறகு, அரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி நன்றாக குழைத்து ஆறவிடவும்.சீரகம், கறிவேப்பில்லை, தயிர் இரண்டு டீஸ்பூன், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து குழைத்த சாதத்தில் கொட்டி கிளறவும்.
பிறகு,அதில் தயிர் தேவையான அளவு, உப்பு தேவைகேற்ப சேர்த்து கிளறவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி கலந்து பரிமாறவும்.