February 18, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
வரகு அரிசி மாவு – ஒரு கப்.
பால் பவுடர் – முக்கால் கப்.
கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்.
பால் – கால் கப்.
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி.
முந்திரி, பாதாம் பொடிசெய்தது – இரண்டு மேசைக்கரண்டி.
செய்முறை
கடாயில் வரகு அரிசியை லைட்டாக வறுத்த பின், முந்திரி, பாதாம் பவுடர், பால் பவுடர், பால், கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.நன்றாக சேர்த்துவந்ததும் வெண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
பால் கோவா போல் பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவிவிடவும்.
சிறிய துண்டுகளாக வெட்டி குளிசாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.சுவையான வரகு மில்க் பர்பி ரெடி.