April 27, 2018
tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1.
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள்/மிளகாய் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காயை நீரில் கழுவி,இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மெல்லியதாக,வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து,அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.எண்ணெய் நன்கு சூடானதும்,அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து,ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால்,வாழைக்காய் சிப்ஸ் ரெடி!!!