October 29, 2018 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
முட்டை – 2
சர்க்கரை/உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து,அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து,அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி,மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால்,வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!