• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெங்காய பஜ்ஜி

July 26, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 5 (வெட்டப்பட்டு மற்றும் அடுக்குகளாக பிரிக்கப்பட்டது)
வறுத்தெடுக்கத் தேவையான எண்ணெய்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
சுத்திகரிக்கப்பட்ட மாவு – 1½ கப்
உலர்ந்த மற்றும் கலந்த மூலிகைகள் – 1 தேக்கரண்டி
குடிக்கும் சோடா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயத் தூள் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு – ½ தேக்கரண்டி
ப்ரெட் துகள்கள் – ½ கப்
கடுகு தூள் – ½ தேக்கரண்டி
கார்ன்ஃப்ளேக்ஸ் – ½ கப் (நசுக்கியது)
கொத்தமல்லித் தழை – 1 டீஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி அதை அடுக்குகளாக பிரித்து எடுக்கவும். அதன் பின்னர் அதை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.

பின்னர், அடுக்குகளை வெளியே எடுத்து அதை ஒரு சமையலறை துண்டில் காய வைக்க வேண்டும். வெங்காயத் துண்டுகள் காய்ந்த பின்னர் அவற்றை ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும். அதன் பின்னர் அவற்றின் மீது மாவை தூவ வேண்டும். தூவிய மாவு வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகின்றது.

இப்போது, ஒரு பெரிய கிண்ணத்தில் மாவை எடுத்து அதனுடன் சிவப்பு மிளகாயத் தூள், உலர்ந்த மற்றும் கலந்த மூலிகைகள், வெங்காயத் தூள், கடுகு தூள், நொறுக்கப்பட்ட மிளகு, உப்பு சேர்க்கவும். அதன் பின்னர் இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.

அதன் பின்னர் கலவையுடன் சோடாவைச் சேர்த்து மாவு பதத்திற்கு மாற்றவும். மாவின் நிலைத்தன்மையை சோதித்து பாருங்கள். அது மிகவும் கெட்டியாகவும் அல்லது தண்ணீராகவும் இருக்கக்கூடாது.

கலவையை நன்கு கலக்கவும். கலவையில் கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு தட்டில் நொறுக்கப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ், ப்ரெட் தூள், மாற்றும் கொத்த மல்லித் தழை போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.பின்னர், ஆழமான சட்டியில் வறுக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி சூடு படுத்தவும்.

இப்பொழுது வெங்காயத்தை மாவில் நன்கு முக்கி எடுங்கள். மிகவும் கவனமாக வெங்காயத்தை முக்கி எடுக்கவும். மாவு வெங்காயத்தின் அனைத்து பக்கங்களிலும் நன்கு பரவி இருக்க வேண்டும்.

இப்போது, முக்கி எடுக்கப்பட்ட வெங்காயத்தை கார்ன்ஃப்ளேக்ஸ் கலவையில் நன்கு தடவி எடுக்கவும். கார்ன்ஃப்ளேக்ஸ் கலவை வெங்காயத்தின் மீது நன்கு பதிந்திருக்க வேண்டும்.

அதன் பின்னர், சூடான எண்ணெய்யில் வெங்காயத்தை நன்கு பொரித்து எடுக்கவும். வெங்காயம் நல்ல தங்க பழுப்பு நிறம் வரும் வரை காத்திருந்து விட்டு அதன் பின்னர் வெங்காயத்தை எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

அதிகமான எண்ணெய் வடிந்த பின்னர் பஜ்ஜிகளை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சாஸ் அல்லது உங்களுக்கு பிடித்த சட்னி உடன் சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க