• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளரிக்காய் பாயாசம்

November 16, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 2 கப்
ஜவ்வரிசி – 1/4 கப்
கண்டென்ஸ்டு மில்க் – 1/4 கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 1 கப்
சர்க்கரை – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் பாதாம் – 2-3 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை துருவியோ அல்லது மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை ஒரு வாணலியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

ஜவ்வரிசியானது பாதி வெந்ததும், அதில் வெள்ளரிக்காயை போட்டு, வெள்ளரிக்காய் நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்தமும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான வெள்ளரிக்காய் பாயாசம் ரெடி!!!

மேலும் படிக்க