• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிக்கன் மலாய் டிக்கா

April 20, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ

வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை ஏலக்காய் – 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

துருவிய சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பின்பு பிளெண்டரில்/மிக்ஸியில் தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,பாதி வெண்ணெய்,க்ரீம்,சீரகப் பொடி, ஏலக்காய்,பச்சை மிளகாய்,சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை பற்ற வைத்து,க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி,நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும்.அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும்.இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால்,சிக்கன் மலாய் டிக்கா ரெடி!!!

மேலும் படிக்க