May 24, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 4
தக்காளி – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
வெதுவெதுப்பான நீர் – 1 கப்
செய்முறை:
முதலில் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் 5-6 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடம் பிரட்டி விட்டு, பின் அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, பின் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, மிதமான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவினால், பட்டன் சிக்கன் ரெடி!!!