• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முட்டை பிட்சா

April 8, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

பிட்சா பேஸ் – 1.

எண்ணெய் – 1 டீஸ்பூன்.

வெங்காயம் – 1 (நறுக்கியது).

தக்காளி – 1 (நறுக்கியது).

பூண்டு – 2 பற்கள் (நறுக்கியது).

முட்டை – 1 (வேக வைத்தது).

தக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

சில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்.

உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் – 1 டீஸ்பூன்.

சீஸ் – தேவையான அளவு (துருவியது).

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டைகளை நீளவாக்கில் நான்கு துண்டுகளாக்கி வைக்க வேண்டும்.

பிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளியைத் தூவி விட வேண்டும்.பின் துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி!!!

மேலும் படிக்க