January 21, 2017 awesomecuisine.com
தேவையான பொருட்கள்
நெய் – இரண்டு டீஸ்பூன்.
முந்திரி – ஐந்து.
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்.
சுக்கு பொடி – கால் டீஸ்பூன்.
வெல்லம் – அரை கப்.
தண்ணீர் – தேவையான அளவு.
தேங்காய் பால் – கால் கப்.
கோதுமை ரவை – ஒரு கப்.
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துகொள்ளவும்.அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்து எடுக்கவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வருத்த கோதுமை ரவையை சேர்த்து வேகவிடவும், பின், வெல்லம் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு நெய் இரண்டு டீஸ்பூன் சேர்த்து வருத்த முந்திரி, தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கிவிடவும்.