• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐதராபாத் மட்டன் மசாலா

May 17, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
தயிர் – 100 கிராம்
மிளகுத் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (தட்டியது)
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
மிளகு – 10
அன்னாசிப்பூ – 4
கிராம்பு – 5
ஏலக்காய் – 4
பட்டை – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதில் தயிர், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் அதனை குக்கரில் போட்டு, பின் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், மட்டன் மசாலா ரெடி!!!

மேலும் படிக்க