May 31, 2017 tamilboldsky.com
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
தயிர் – 100 கிராம்
மிளகுத் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (தட்டியது)
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
மிளகு – 10
அன்னாசிப்பூ – 4
கிராம்பு – 5
ஏலக்காய் – 4
பட்டை – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதில் தயிர், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அதனை குக்கரில் போட்டு, பின் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், மட்டன் மசாலா ரெடி!!!