January 30, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
இட்லி – 4.
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி.
பச்சரிசி மாவு – 2 மேசைக்கரண்டி.
கார்ன் ஃப்ளார் – 2 தேக்கரண்டி.
மிளகாய்ப் பொடி – ஒரு தேக்கரண்டி.
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை.
உப்பு – அரை தேக்கரண்டி.
சோடா உப்பு – கால் தேக்கரண்டி.
பச்சைக் கொத்தமல்லி – சிறிது.
பொரிக்க.
ஆயில் – தேவைக்கேற்ப.
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவு, மிளகாய்ப் பொடி, கேசரி பவுடர், உப்பு, சிறிது கொத்தமல்லி இவற்றை ஒன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் சோடா உப்பை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து கலந்துக் கொள்ளவும்.இட்லியை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்த மாவில் இட்லி துண்டுகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.பொரித்த துண்டுகளின் மீது பச்சைக் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.மாலை நேர ஸ்நாக்ஸ், விருந்துகளில் ஸ்டார்டர் ஆகப் பரிமாறுவதற்கு ஏற்ற உணவு இது.